சென்னையில் நிற்காமல் சென்ற கார்..துரத்திச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள்- திக் திக் சம்பவம்..!

Tamil Nadu Police Death Chengalpattu
By Thahir Aug 01, 2023 02:49 AM GMT
Report

சென்னை அருகே அதிகாலையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

வேகமாக சென்ற கார் 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை போலீசார் என்கவுண்டர் நடத்தினர். கூடுவாஞ்சேரி பகுதியில் புதுச்சேரி சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது போலீசார் காரை சோதனைக்காக நிறுத்த முயன்ற போது கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

இதையடுத்து அந்த காரை போலீசார் பின் தொடர்ந்து துரத்திச் சென்றனர். அப்போது காரில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் இருந்தது தெரியவந்தது.

2 raiders shot dead in police encounter in Chennai

ரவுடிகள் தாக்குதல் - போலீசார் என்கவுண்டர்

போலீசார் துரத்தி வருவதை கண்ட இரு ரவுடிகளும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

போலீசார் நடத்திய என்கவுண்டரில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதிகாலை நேரத்தில் சினிமா பாணியில் ரவுடிகளை துரத்திச் சென்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.