"தோனியிடம்" முகேஷ் குமார் கேட்ட 2 கேள்விகள் - என்ன பதில் சொன்னார் தெரியுமா ?
ஐபில் தொடரில் தோனியை சந்தித்த போது தான் கேட்ட சீக்ரெட் கேள்விகள் குறித்து முகேஷ்குமார் பேசியுள்ளார்.
முகேஷ்குமார்
ரஞ்சி டிராபி போட்டிகளில் பெங்கால் அணிக்காக விளையாடியபோது சிறப்பாக ஆடி 149 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக முகேஷ்குமார் இராணி கோப்பை, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர் என்று பல வாய்ப்புகளை பெற்றார்.
பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான மாற்று வீரராகவும் முகேஷ் குமார் தேர்வாகி லண்டன் சென்றார். இதில் ஐபில் தொடர் விளையாடியபோது தோனியை சந்தித்த முகேஷ்குமார் அவரிடம் கேட்ட கேள்விகள் குறித்தும் அதற்கு அவர் சொன்ன பதில் குறித்தும் பேசியுள்ளார்.
தோனி சொன்ன பதில்கள்
தோனியை அவர் சந்தித்த போது, "ஒரு கேப்டனாகவும், ஒரு விக்கெட் கீப்பராகவும் பந்துவீச்சாளர்களிடம் என்ன பேசுவீர்கள் என்று கேள்வி எழுப்பினேன்.அதற்கு தோனி என் தோளில் கை போட்டு "நாம் முயற்சிக்காத வரை எதையும் கற்றுக் கொள்ள முடியாது. நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ , அதனை சரியாக செய்ய வேண்டும்.
நாம் எதையும் முயற்சிக்காத வரை, எதையும் கற்றுக் கொள்ள முடியாது. முடிவுகளை பற்றி கவலைப்படாமல் என்ன செய்ய நினைக்கிறாயோ அதை செய்" என்று என்னிடம் மிகவும் எளிமையாக கூறினார். இது மிகவும் சரியான அறிவுரையாக இருந்தது என்று முகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.