நடுவானில் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோத போனதால் பரபரப்பு - 3 இடைநீக்கம்

Nepal Air India
By Thahir Mar 27, 2023 02:06 AM GMT
Report

நாடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா - நேபாளம் ஏர்லைன்ஸ் விமானங்கள் தரையிறங்க இருந்த போது ஒன்றோடு ஒன்று மோதவிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடுவானில் பரபரப்பு 

மார்ச் 24 ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து காத்மாண்டுக்குநேபாள ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ-320 விமானம் வந்து கொண்டிருந்தது. இதே போல புதுடெல்லியிலிருந்து காத்மாண்டுவுக்கு ஏர் இந்தியா விமானமும் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஏர் இந்தியா விமானம் 19,000 அடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அதே இடத்தில் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

2-planes-almost-collided-in-mid-air

இரண்டு விமானங்களும் அருகில் இருப்பதை ரேடார் கண்டறிந்த பின்னர் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் 7,000 அடிக்கு கீழே இறங்கியுள்ளது. இதனால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

3 பேர் இடைநீக்கம் 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அமைத்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் (ATCs) பொறுப்பில் இருந்த மூன்று ஊழியர்களை நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) இடைநீக்கம் செய்துள்ளது.