அடுத்தடுத்து சிக்கும் விமான பயணிகள் - சென்னை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா!

COVID-19 Tamil nadu Chennai
By Thahir Dec 28, 2022 05:53 AM GMT
Report

துபாயிலிருந்து சென்னை வந்த பயணிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பில் தமிழக அரசு 

சீனாவில் கொரோனா தொற்று பரவல் என்பது அதிகரித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் உதவியாளர்களுக்கு கொரோனா வார்டில் அனுமதி இல்லை என்றும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மாணவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று 

இந்த நிலையில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2-people-who-arrived-at-chennai-airport-covid

இதை தொடர்ந்து துபாயிலிருந்து சென்னை வந்த விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு இருக்கா.. இல்லைய என்பது பற்றி ஆய்வு செய்ய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுக்கு தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை.

மேலும் அவர்களுடன் பயணித்தவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டம்