விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் மரணம்...!

Tamil nadu Death
By Nandhini Sep 01, 2022 05:28 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி தேர் பவனி நடைபெற்றது. அப்போது, விநாயகர் சிலை தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தார்கள். அப்போது, சப்பரத்தில் திடீரென்று மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

2-people-died-electric-shock

போலீசார் வழக்குப்பதிவு 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முற்கட்ட விசாரணையில், தேர் வளையில் திருப்பியபோது மரத்தின் மீது மோதியதால், விளம்பர பலகை சப்பரத்தில் விழுந்தது. அப்போது அதிலிருந்து மின்சாரம் தாக்கியது தெரியவந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.