சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக மாலா, சவுந்தர் பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் நிதுமோலு மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில்,
“நிதுமோலு மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோரை சென்னையின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர்கள் இருவரும் பொறுப்பேற்ற நாளில் இருந்து இரண்டு வருட காலத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக பதவி வகிப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சௌந்தர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2 ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு இவர்கள் இருவரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan