4 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரியல் பூங்காவில் பிறந்த முதல் புலிக்குட்டி - வைரலாகும் வீடியோ
சத்தீஸ்கர், துர்க்கில் உள்ள மிருகக்காட்சிசாலையில் 2 மாத வெள்ளைப் புலி குட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
2 மாத வெள்ளைப் புலி குட்டி
சத்தீஸ்கர், துர்க் மாவட்டத்தில் உள்ள இஸ்பத் பிலாயில் உள்ள மைத்ரி பாக் உயிரியல் பூங்காவில் சிங்கம் என்ற பெயரில் புலிக் குட்டி பிறந்தது.
தற்போது 2 மாதமாகும் சிங்கம் தன் தாய் ரோமாவுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிக்கிறது. குட்டிக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாமல், தாய் சிறப்பாக கவனித்து வருகிறது. இந்த புலிக்குட்டியை பார்வையாளர்கள் வந்து பார்த்து, மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
இது குறித்து, இப்பூங்காவின் பொறுப்பாளர் டாக்டர் நவீன் குமார் ஜெயின் கூறுகையில்,
4 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரியல் பூங்காவில் பிறந்த முதல் புலிக்குட்டி இந்த சிங்கம் தான். முன்னதாக 2018-ல் ரக்ஷா மற்றும் ஆசாத் என்ற 2 வெள்ளைப் புலிக் குட்டிகள் பிறந்தன.
சோனம் மற்றும் சுல்தான் என்ற வெள்ளைப் புலிகளை இனப்பெருக்கம் செய்தது. பின்னர் சுல்தான் தனது துணையை வேறு மாநிலத்திற்கு மாற்றியதால் சோனம் தனியாக இருந்து வந்தது.
இதற்கிடையில், புதிதாக ரோமா என்ற புலியுடன் சோனம் நட்புடன் பழகி வந்தது. இந்த இரண்டு புலிகளும் ஒன்றாக கூண்டில் வைக்கப்பட்டு இனப்பெருக்கம் செய்ய ஊக்குவிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், தற்போது சிங்கம் பிறந்தது. சிங்கம் 2 மாதங்களாக கண்காணிக்கப்பட்டு, தற்போது பார்வையாளர்கள் முன்னிலையில் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

First Glimpse of 2 month old white tiger cub ‘Singham’ with his mother ‘Roma’ in Bhilai’s Maitribagh.@ipskabra #Chhattisgarh #Tigers #zoo #forestanimals pic.twitter.com/7J6YGXbayn
— Tanmay (@SakalleyTanmay) November 8, 2022