குழந்தையை கொலை செய்த கொடூரத் தாய் - அதிர்ச்சி சம்பவம்
டில்லி, சிராக் பகுதியைச் சேர்ந்தவர்கள் குல்ஷன் கவுசிக். இவருடைய மனைவி டிம்பிள். இத்தம்பதிகளுக்கு 4 வயதில் ஆண் மகன் உள்ளான்.
இந்நிலையில், மீண்டும் டிம்பிள் கர்ப்பமானார். 2 மாதத்திற்கு முன்பு அழகான பெண் குழந்தை டிம்பிள்க்கு பிறந்தது. ஆனால், பெண் குழந்தை பிறந்ததில் குல்ஷன் கவுசிக்கிற்கு விருப்பமே இல்லை.
இதனால், டிம்பிளிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தார் குல்ஷன். கணவன் அடிக்கடி பெண் குழந்தையை காரணம் காட்டி சண்டை போட்டு வந்ததால் டிம்பிள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
இதனால், பெண் குழந்தையை பார்த்ததும் டிம்பிள்க்கு எரிச்சல் வந்தது.
இந்நிலையில், கணவர் வெளியே சென்ற நேரத்தில், டிம்பிள் 2 மாத பெண் குழந்தையை வீட்டில் இருந்த மின்சார அடுப்பில் வைத்து கொலை செய்துள்ளார்.
பெண் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதால், அக்கம், பக்கத்தினருக்கு டிம்பிள் மேல் சந்தேகம் ஏற்பட்டது. நேற்று, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீடு முழுவதும் அதிரடியாக சோதனை செய்தனர்.
போலீசார் வீடு முழுதும் சோதனை நடத்திய போது, சமையல் அறையில் இருந்த மைக்ரோவேவ் ஓவனுக்குள் 2 மாத பெண் குழந்தை இறந்து கிடந்தது.
பெண் குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, டிம்பிளை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
