2 மாத ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் கரு.., மருத்துவர்கள் அதிர்ச்சி

Karnataka
By Yashini Oct 26, 2026 10:23 AM GMT
Report

கர்நாடகாவில் 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் கரு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வயிற்றுக்குள் கரு

கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 2 மாத ஆண் குழந்தைக்கு திடீரென வயிறு வீக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குழந்தையை சிந்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் கட்டி போன்ற அமைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

2 மாத ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் கரு.., மருத்துவர்கள் அதிர்ச்சி | 2 Month Old Baby Fetus In Stomach Karnataka

மேலும் நடந்த பரிசோதனையில் அது கரு என்பது தெரியவந்தது. இந்த அரிய மருத்துவ நிலை Fetus in Fetu என அழைக்கப்படுகிறது.

இரட்டை கருக்களில் ஒன்று வளர்ச்சி அடையாமல், மற்றொரு கருவின் உடலுக்குள் சிக்கிக்கொள்ளும்போது இந்த நிலை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக குழந்தை பல்லாரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.