அடுத்தடுத்து மாடல் அழகிகள் மர்ம கொலை.. உலவும் சீரியல் கில்லர்? - ஷாக் சம்பவம்!

Attempted Murder United States of America Death
By Vinothini Sep 19, 2023 09:31 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

தொடர்ந்து 2 மாடல் அழகிகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.

மர்ம கொலை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பங்கர் ஹில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் மலீசா மூனி, 31 வயதான இவர் ஒரு மாடல் அழகி. இவர் கடந்த 12-ம் தேதி அவருடைய குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

2-model-killed-in-america-suspecting-serial-killer

இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் 32 வயதான நிக்கோல் கோட்ஸ் என்பவர் அவருடைய குடியிருப்பில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பற்றியும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நிக்கோலின் சடலத்தில் ஒரு கால், உதைப்பது போன்று மேல்நோக்கி இருந்துள்ளது. இது போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

சீரியல் கில்லர்?

இந்நிலையில், மகள் மரணத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நிக்கோலின் தாயார் ஷரோன் கோட்ஸ் கூறியுள்ளார். இருவரின் உறவினர்களும், இதனை ஒரு சீரியல் கில்லர் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

2-model-killed-in-america-suspecting-serial-killer

இதற்கு வேறு யாரும் இதற்கு இலக்காக கூடிய சாத்தியமும் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இருவரும் ஒரு மைல் தொலைவுக்கு இடைப்பட்ட இடத்தில் தங்கியுள்ளனர். இதனால், சீரியல் கில்லரின் தொடர்பு பற்றியும் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.