எரியும் சிறுமியின் உடலை பிச்சு தின்ற இருவர் - விராரணையில் ஷாக்கான போலீசார்!

Death Odisha
By Vinothini Jul 15, 2023 11:45 AM GMT
Report

 ஒடிசாவில் எரிந்துகொண்டிருக்கும் சிறுமியின் உடல் பாகங்களை எடுத்து இருவர் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் உடல்

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பரிபாடா என்ற பகுதியைச் சேர்ந்தவர் மதுஸ்மிதா. பழங்குடியினத்தை சேர்ந்த இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் அதனால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

2-men-ate-small-girls-half-burned-meat

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் இவரது கிராமத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தகன மைதானத்தில் எரியூட்டப்பட்டது. அப்பொழுது உடல் எரிந்துகொண்டிருக்கும்போதே, அங்கு 58 வயதான சுந்தர் மோகன் சிங் என்பவரும் , 25 வயதான நரேந்திர சிங் ஆகிய இருவரும் வந்தனர்.

விசாரணை

இந்நிலையில், அவர்கள் அந்த சிறுமியின் பாதி எறிந்த உடலை பிய்த்து அதை மூன்று பங்காகப் பிரித்து, இரண்டு பங்குகளை மீண்டும் தீயிலேயே வீசிவிட்டு, ஒரு பாகத்தை இரண்டாகப் பிரித்து இருவரும் சாப்பிட்டிருக்கிறார்கள். இதனை கண்ட கிராம மக்கள் அவர்களை மின்கம்பத்தில் கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

2-men-ate-small-girls-half-burned-meat

போலீசார் விசாரணை நடத்தியதில், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தந்துனி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடியினரான இருவர்மீதும் ஐபிசி 297, 34 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் விசாரணையில், "திருமணமாகாத ஒரு பெண்ணின் இறைச்சியை உட்கொண்டால், எங்களுக்குச் சக்தி அதிகரிக்கும் என்று நம்பினோம்" எனக் கூறினார்கள். சுந்தர் சிங் சூனியம் செய்பவர் எனக் கூறப்படுகிறது. அதனால்தான் அவர் இந்தச் செயலைச் செய்ததாகத் தெரிகிறது, என்று கூறியுள்ளனர்.