தமிழகம் வந்தடைந்தன 2.4 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்...
மும்பையிலிருந்து தமிழகத்திற்கு மேலும் 2.4 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானத்தில் இன்று சென்னை வந்தடைந்தன.
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒருவார காலத்திற்கு தளா்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது.மேலும் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்ஸிஜன் வெண்டிலேட்டா் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிலுருந்தும்,வெளிமாவட்டங்களிலிருந்தும் தமிழகத்திற்கு பெருமளவு வரவழைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தடைந்தன. 20 பாா்சல்களில் வந்த இந்த தடுப்பூசி மருந்து பாா்சல்களை
விமானநிலைய அதிகாரிகள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.