2 தாலி கட்டி 2 சகோதரர்களுடன் குடும்பம் நடத்தும் பெண் - வைரலாகும் வீடியோ
2 தாலி கட்டி பெண் ஒருவர் இருவருடன் குடும்பம் நடத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 தாலி
இந்தியாவில் ஹிந்து திருமண சட்டப்படி ஒரு நேரத்தில் ஒரு பெண் ஒரு ஆணை மட்டுமே திருமணம் செய்ய முடியும். வேறொருவரை திருமணம் செய்வதாக இருந்தால் விவாகரத்து பெற்ற பின்னரே திருமணம் செய்ய முடியும்.
உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2 தாலி கட்டி 2 கணவர்களுடன் வாழ்வதாக கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில் பெண்ணின் அருகே அவரது இரு கணவர்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் சகோதரர்கள் என கூறப்படுகிறது. இந்த வீடியோவில் பேசும் பெண், "ஒரு தாலி ஒரு கணவருக்காகவும், மற்றொரு தாலி இன்னொரு கணவருக்காகவும் அணிந்துள்ளேன். நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
எங்கு சென்றாலும் நாங்கள் 3 பேரும் ஒன்றாகத்தான் செல்வோம், சேர்ந்துதான் தூங்குகிறோம். 2 கணவர்களுடனும் சரியான அளவில் நேரத்தை செலவிடுகிறேன்" என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி 1.9 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.