3 பேரும் ஜாலியா இருக்கலாம்; கள்ளக்காதல் விவகாரம் - இளைஞருக்கு நேர்ந்த கொடுமை

Attempted Murder Chennai Relationship Crime
By Sumathi Jan 17, 2026 06:18 PM GMT
Report

கள்ளக்காதல் விவகாரத்தில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டா பழக்கம்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வக் குமார் (22). இவருக்கு ரீனா (24) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

3 பேரும் ஜாலியா இருக்கலாம்; கள்ளக்காதல் விவகாரம் - இளைஞருக்கு நேர்ந்த கொடுமை | 2 Girls Relationship With Boy Chennai

ரீனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் இருக்கும் நிலையில், இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அப்போது ரீனாவின் தோழியான ரஜிதா (25) என்பவருடனும் செல்வக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் ரீனாவிற்கு தெரிய வரவே, வாக்குவாதமாகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த இரு பெண்களும் செல்வக்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று ரஜிதா ஆகிய இருவரும், செல்வக்குமாருக்கு போன் செய்து ஆசை வார்த்தை கூறி அழைத்தனர்.

பெண்கள் மோசடி

அதன் பெயரில் அங்கு சென்ற செல்வக்குமாரை பட்டா கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், செல்வக்குமாரை மீட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

[OS0QW2N

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பல்லாவரத்தில் பதுங்கியிருந்த 17-வயது சிறுவன் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர் விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞருக்கு காதல் வலை விரித்து சிக்கும் இளைஞர்களிடம் பணம் சம்பாதித்து உல்லாசமாக இரு பெண்கள் இருந்து வந்தது தெரியவந்தது. செல்வகுமார் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்தால் கொலை செய்துள்ளனர்.