ஒரே நேரத்தில் 2 மாணவிகளை கர்ப்பமாக்கிய இளைஞர் - குழந்தைகளுடன் கதறல்
பள்ளி,கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகள் கர்ப்பம்
நீலகிரி ஊட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்(22). டிப்ளமோ முடித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கும், ஊட்டியில் தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் சண்டையால் 2 பேரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். அந்த நேரத்தில் ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழகியுள்ளார்.
இதில் அவர் கர்ப்பமானது தெரியவந்ததால், அவரது வீட்டிற்கு தெரியாமல் பிரவீன் மாணவியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில் பழைய காதலியுடனும் நெருங்கி பழகி வந்துள்ளார்.
ஏமாற்றிய இளைஞர்
இந்நிலையில் பள்ளி மாணவிக்கு வயிறு வலி ஏற்பட்டதில் அவரை தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்து, குழந்தையும் பிறந்துள்ளது.

உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பிரவீன் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியது தெரியவந்து கைது செய்யப்பட்டுள்ளார்.