ஒரே நாளில் 2 திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம் - பரபரப்பு சம்பவம்
தமிழகத்தில் வரும் 19ம் தேதி மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் திமுக, அதிமுக, பாஜக, பாமக, சுயேட்சை என பல கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனுசுயா. இவர் இரவு, பகல் பாராமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று பிரச்சாரத்தின் போது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், இன்று காலை ஈரோடு அம்மாபேட்டை அடுத்த உமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்தவர் சித்தி ரெட்டி (62). இவர் பேரூராட்சி, 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டார். தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் இன்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். திமுக வேட்பாளர் உயிரிழந்ததால் இந்த வார்டில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டில் திமுக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.