இரண்டே மாவட்டம் கொண்ட இந்திய மாநிலம் தெரியுமா? ஆனால் நாட்டின் கனவு மாநிலம்
பல மாவட்டங்களின் கூட்டமைப்பில் தான் ஒரு மாநிலம் இருக்கின்றது.
மாநிலம்
ஒரு மாநிலம் என்றால் அதில் பல மாவட்டங்கள் இருக்கும். மாவட்டங்களின் கூட்டமைப்பே மாநிலம் என்றும் கூறப்படுகிறது. வட - தென் மாவட்டங்கள் என தமிழகத்தில் கூறப்படும் நிலையும் உள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக 75 மாவட்டங்களை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளது. ஆனால், வெறும் 2 மாவட்டங்களை கொண்ட மாநிலம் ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? அதுவும் அம்மாநிலம் ஒரு பிரபல சுற்றுலா தளம்.
2 மாவட்டம்
இந்திய மட்டுமின்றி உலகளவில் இருந்து பெரிய கூட்டத்தை ஈர்த்து வரும் கோவா தான் அம்மாநிலம். போர்த்துகீசியர்களால் நீண்ட காலமாக ஆட்சி செய்யப்பட்ட கோவா 1961-ல் தான் சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இம்மாநிலத்தில் தான் இரண்டே மாவட்டங்கள் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா. அவ்வளவு தான். 3702 square கிலோமீட்டர் மட்டுமே கொண்ட கோவாவை நோக்கி தான் பல இந்திய இளைஞர்களின் கனவும் உள்ளது.