உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் 2டிஜி மருந்து

Covid 19 2dg drugs
By Petchi Avudaiappan Jun 17, 2021 05:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக 2டிஜி மருந்து செயல் திறன் கொண்டதாக உள்ளதென ஆய்வில் தெரியவந்துள்ளது. இ

இன்ஸ்ட்டியூட்ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து இந்த 2டிஜி கொரோனா மருந்தை தயாரித்துள்ளது.

டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையிலான இந்த மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ கடந்த 1ஆம் தேதி அனுமதி அளித்தது. இது பவுடர் வடிவில் இருப்பதால் தண்ணீரில் கலந்து குடிக்க முடியும்.

இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. மேலும் இது ஆக்சிஜன் தேவையைக் குறைக்கவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து 2டிஜி அனைத்து வகையான உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் இந்த மருந்து திறம்பட செயல்படுவதாக முதல்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.