சட்டப்பேரவை தேர்தல்.., இதுவரை 1,390 பேர் வேட்புமனு தாக்கல்

Udhayanidhi Stalin Vijay M K Stalin Seeman Election
By Yashini Apr 03, 2026 04:41 AM GMT
Report

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

இன்று புனித வெள்ளி மற்றும் 5ஆம் தேதி ஞாயிறு விடுமுறை என்பதால், நாளையும் 6ஆம் தேதியும் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும்.

இந்நிலையில், இதுவரை மொத்தம் 1,390 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல்.., இதுவரை 1,390 பேர் வேட்புமனு தாக்கல் | 2 Days Left 1390 People Have Filed Nominations

முதல் நாளில் 573 பேரும், இரண்டாம் நாளில் 787 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சீமான், விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, பல சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.