59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ்

Indian National Congress Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 20, 2026 02:08 PM GMT
Report

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் நாளை தமிழக அமைச்சராக பதவியேற்க உள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் உள்ள நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ஆட்சியமைக்க ஆதரவளித்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லீம் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இணைய தவெகவில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் | 2 Congress Mla To Be In Tamilnadu Ministry

இதே போல், தவெக கூட்டணியில் இணைந்த 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ்க்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரைத் தமிழக அமைச்சரவையில் சேர்ப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். 

அவர்கள் இருவரும் நாளை (21.05.2026) அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். இது நமக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும், ஏனெனில் 59 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு அமைச்சரவையில் இணைகிறது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் தமிழ்நாடு மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவார்கள் என்றும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர். ராகுல் காந்தி வகுத்துத் தந்த மக்கள் நலன் மற்றும் மக்கள் சார்பு ஆட்சியின் உன்னதமான தொலைநோக்குப் பார்வையை நனவாக்க பாடுபடுவார்கள் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.