2 நிபந்தனைகள் உள்ளது - ஒப்புக்கொண்டால் கூட்டணி..இல்லனா தனித்து போட்டி - மநீம அதிரடி..!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் தான கூட்டணி என தாங்கள் கூறவில்லை என மநீம தெரிவித்துள்ளது.
கூட்டம்
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், கூட்டத்திற்கு கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பேசிய அவர் நிர்வாகிகளிடத்தில், கூட்டணி முடிவு குறித்து தான் பார்த்து கொள்வதாக தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மவுரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 நிபந்தனைகள்
அவர் பேசும் போது, தமிழ்நாடு மற்றும் தமிழர் நலனில் மக்கள் நீதி மய்யம் எந்த சமரசமும் செய்து கொள்ளாது. மேலும், கட்சியின் தலைவர் கமலஹாசனின் கொள்கைகளுடனும் சிந்தனைகளுடன் ஒத்த கருத்து கொண்டவர்களுடன் தான் கூட்டணி அமைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இந்த இரு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 40 தொகுதிகளிலும் தனித்து தான் போட்டி என்றும் தெரிவித்துள்ளார்.