ரயில் கழிப்பறையில் 2 சிறுவர்கள் - சத்தம் கேட்டு மிரண்ட போலீஸார்!
ரயில் கழிப்பறையில் 2 சிறுவர்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
ரயில் சோதனை
கோரக்பூரிலிருந்து சென்ற ரயில் ஒன்றில் வழக்கம்போல போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கழிப்பறையை கடந்து சென்றபோது, அதிலிருந்து சிறுவர்கள் அழும் சத்தம் கேட்டுள்ளது.
உடனே போலீஸார் அதனை திறக்க முயற்சி செய்துள்ளனர். உள்பக்க தாள் இடப்பட்டிருந்ததால், நீண்ட நேரத்திற்கு பின் கதவு திறக்கப்பட்டு உள்ளிருந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
சிறுவர்கள் மீட்பு
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் யாரோ ஒருவர் அழைத்து வந்து தங்களை கழிப்பறையில் விட்டதாக கூறியுள்ளனர். மேலும், அவர்கள் பெற்றோர் குறித்து கூறமுடியவில்லை.
பின், சிறுவர்கள் உடனடியாக அந்த மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை வடகிழக்கு ரயில்வேயில் மட்டும் 644 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.