2 குழந்தைகள் துடிதுடித்து பலி; மனைவிக்கு நேர்ந்த கதி - கணவன் வெறிச்செயல்!
மனைவி மற்றும் குழந்தைகளை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம்
சேலம், கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அசோக்குமார்(40). இவரது மனைவி தவமணி(38). இவர்களுக்கு வித்யதாரணி, அருள்பிரகாஷ் மற்றும் அருள்குமாரி என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அவரது வீட்டிற்கு உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
குழந்தைகள் பலி
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்ததில், 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மனைவி, குழந்தைகளை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.