துடிதுடித்து பறிபோன 8 உயிர்கள்; விபத்து ஏன்? நிதியுதவி அறிவிப்பு!

M K Stalin Accident Death Tenkasi
By Sumathi Nov 24, 2025 03:27 PM GMT
Report

தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

பேருந்து விபத்து

தென்காசி, இடைகால் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

bus accident

50 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி தனியார் பேருந்து டிரைவர் பேருந்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்விபத்தில் காயமடைந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 56 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன்.

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - 4 ஐயப்ப பக்தர்கள் பலி!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - 4 ஐயப்ப பக்தர்கள் பலி!

8 பேர் பலி

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்,

mk stalin

பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.