நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பிரித்தானிய தம்பதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
சுற்றுலா விசாவில் இந்தியா வந்த பிரித்தானிய தம்பதியினருக்கு நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி லூயிஸ் கேப்ரியல்- அனுஷி எம்மா கிறிஸ்டின்.
இருவரும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்து தங்கியிருந்துள்ளனர், ராஜஸ்தானின் அஜ்மீரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கடந்த 21ம் தேதி, இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்தனர்.
அரசியல் தொடர்பான செயல்களில் ஈடுபடுவது விதிமுறையை மீறிய செயலாகும்.
உடனடியாக குறித்த ஸ்டிக்கர்கள் நீக்கப்பட்டதுடன் இருவருக்கும் ”Leave India Notice” பிறப்பிக்கப்பட்டது.
சுற்றுலா விசாவில் நாட்டில் இருக்கும்போது, எந்தவிதமான அரசியல், போராட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.