கால்பந்து விளையாடும் கரடி குட்டிகள் - வைரலாகும் அரிய வீடியோ

play bear football odissa
By Anupriyamkumaresan Sep 14, 2021 09:56 AM GMT
Report

ஒடிசா மாநிலத்தில் இரண்டு கரடி குட்டிகள் கால்பந்து விளையாடும் அரிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலத்தின், நபரங்க்பூர் என்ற இடத்தில் உள்ள மைதானம் ஒன்றில் ஏராளமான சிறுவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மைதானத்திற்குள் திடீரென இரண்டு கரடி குட்டிகள் புகுந்துள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த குழந்தைகள் பந்தை அங்கேயே விட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து, அங்கிருந்த பந்தை எடுத்து இரண்டு கரடி குட்டிகளும் மாறி மாறி பந்து விளையாடியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.