நெல்லை கல்குவாரி விபத்து தேடப்பட்ட ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் கைது..!
நெல்லை கல்குவாரி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான நிலையில் தேடப்பட்டு வந்த ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் கைது.
நெல்லை மாவட்டம் அமைதிப்பான் குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே பாறைகளுக்குள் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில் கல்குவாரி விபத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திசையன்விளையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.