திருப்பதியில் ஒரே நாளில் குவிந்த உண்டியல் காணிக்கை - எவ்வளவு தெரியுமா?
Temple
Income
Tirupati
One day
2.9 Crore
By Thahir
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 27 ஆயிரத்து 536 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள்.
அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 27 ஆயிரத்து 536 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
13 ஆயிரத்து 635 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 9 லட்சம் கிடைத்ததாக,
கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.