செடிவிதையில் தங்கக் கடத்தல் - 2.5 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் !

airport chennai gold
By Irumporai May 10, 2021 02:39 PM GMT
Report

செடிகளின் விதைகள் என்று குறிப்பிட்டு துபாயிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் வந்த கொரியா் பார்சலில் ரூ.1.20 கோடி மதிப்புடைய 2.5 கிலோ கடத்தல் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் நேற்று இரவு வந்த கொரியா் பார்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது சென்னை முகவரிக்கு வந்த ஒரு பார்சலில் பூ மற்றும் காய்கறி செடிகளின் விதைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது சுங்கத்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே அந்த பார்சலை தனியே எடுத்துவைத்து அந்த பார்சலில் உள்ள செல்போன் எண்ணை தொடா்பு கொண்டனா்.

அந்த எண் உபயோகத்தில் இல்லை என்றும்  அந்த பார்ச்சலில் உள்ள முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.

அதன்பின்பு அந்த பார்சலை திறந்து பார்த்தனர்அதற்குள் ஓட்ஸ் பாக்கெட்கள் மற்றும் குளிர்பானம் தயாரிக்கும் பவுடா் அடங்கிய பாக்கெட்கள் இருந்தன.

அவைகளை உடைத்து பார்த்தபோது தங்கப்பொடி தூள்கள் கலந்திருந்தன.

செடிவிதையில் தங்கக் கடத்தல் - 2.5 கிலோ  தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் ! | 2 5 Kg Gold Seized At Chennai Airport

இதையடுத்து அவைகளை தண்ணீரில் கரைத்து,தங்கப்பொடி தூள்களை வடிகட்டி எடுத்தனா். மொத்தம் 2.5 கிலோ தங்கப்பொடி தூள்கள் இருந்தன.அதன் சா்வதேச மதிப்பு ரூ.1.20 கோடி.இதையடுத்து தங்கப்பொடி தூள்களை சுங்கத்துறையினா் கைப்பற்றினா்.

அதோடு சுங்கத்துறையினா் இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனா்.செடி விதைகள் என்று குறிப்பிட்டு,தங்கத்தூள்களை நூதனமான முறையில் சென்னைக்கு கடத்திய கடத்தல் ஆசாமிகளை தேடிவருகின்றனா்.