1 முதல் 5 வகுப்பு வரை தேர்வு இல்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் உலக நாடுகள் பெரும்பாலும் முடங்கின.இதனால் பல கல்வி நிலையங்கள் முடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் கல்வி நிலையங்கள் முடப்பட்டன.
இதனால் தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேர்வுகள் இன்றி வெற்றி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இந்தாண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகளில் நேரடி தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இதனிடையே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு இல்லை என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்வு முடிவுகள் மே30 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.