1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ministeranbilmahesh classopen
By Irumporai Sep 15, 2021 08:22 AM GMT
Report

கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில்  கடந்த 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அந்த வகையில், பள்ளிக்கல்வி துறையின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இதில், பள்ளிக்கல்வி துறை சார்ந்த அனைத்து முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும் பேசப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30ம் தேதி முடிவு செய்யப்படும். தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா..? கூடுதல் தளர்வுகளை அறிவிப்பதா..? என்பதற்கான கூட்டம் நடந்த பிறகு முடிவு செய்யப்படும்எனக் கூறியுள்ளார்.