அதிரும் பாகிஸ்தான் தேர்தல் களம் - களமிறங்கும் முதல் இந்து - பெண் வேட்பாளர்...!!

Pakistan Hinduism
By Karthick Dec 26, 2023 09:50 AM GMT
Karthick

Karthick

in உலகம்
Report

பாகிஸ்தான் நாடளுமன்ற பொதுத்தேர்தலில் முதல்முறையாக இந்துப்பெண் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம்

பாகிஸ்தானின் 16-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 2024 பிப்ரவரி 8ம் தேதி அன்று நடைப்பெற உள்ளது. இத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும், இம்ரான்கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் மக்கள் கட்சியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

1st-hindu-women-participating-in-pakistan-election

இந்த தேர்தலுக்கு முன்பாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் பொது இடங்களில் அங்கீகரித்த தொகுதிகளில் 5 சதவீத பெண்கள் போட்டியிட வேண்டும் என்ற சட்டத்திறுத்தம் கொண்டுவந்திருந்தது.

சவீரா பிரகாஷ் 

பொதுத்தேர்தலின் வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்காவின் புனர் மாவட்டத்தில் சவீரா பிரகாஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் மூலம் பாகிஸ்தான் நாட்டு பொதுத்தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப்பெண் என்ற பெருமையை சவீரா பிரகாஷ் பெற்றுள்ளார்.

1st-hindu-women-participating-in-pakistan-election

சவீரா பிரகாஷின் தந்தை ஓய்வுப்பெற்ற மருத்துவர் என்பதுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சி என்னும் கட்சியில் 35 வருடங்களாக உறுப்பினராக உள்ளார். தனது தந்தை உறுப்பினராக இருந்து வரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் தான் சவீரா பிரகாஷ் மகளிர் அணியின் பொதுச்செயாலாளராக பதவி வகித்து வருகிறார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் சவீரா பிரகாஷ் அளிததப்பேட்டியில், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பின்தங்கிய மக்களின் முன்னெற்றத்திற்காகவும் போராடுவேன் என்று கூறியுள்ளார்.