19 வயது அழகான பெண்ணை காதல் திருமணம் செய்த 70 வயது முதியவர் - வைரலாகும் புகைப்படம்

Pakistan Married Viral Photos
By Nandhini Nov 17, 2022 06:54 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பாகிஸ்தானில் 19 வயது இளம் பெண்ணை 70 வயது கொண்ட முதியவர் காதல் திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

19 வயது பெண்ணை திருமணம் செய்த முதியவர்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் லியாகத். இவருக்கு வயது 70. இவர் தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார். தினமும் வாக்கிங் செல்லும்போது ஷுமைலா என்ற 19 வயது கொண்ட பெண்ணிடம் சந்தித்துள்ளார்.

இவர்கள் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் இருவருக்குள் காதலாக மாறியுள்ளது. தற்போது, 19 வயது கொண்ட ஷுமைலாவை லியாகத் காதல் திருமணம் செய்துள்ளார்.

இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் காதலுக்கெல்லாம் வயது ஒரு பெரிய விஷயமாக இருக்காது போல.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.    

19years-old-girl-married-70-years-old-man-pakistan