1986-ம் ஆண்டில் Royal Enfield புல்லெட்டின் விலை தெரியுமா? வைரலாகும் பழைய பில்!
1986-ல் வாங்கிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-ன் பில் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 இந்தியாவில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும். இதன் வடிவமைப்பு காலப்போக்கில் மாறிவிட்டது. ஆனால் மொத்தத்தில் பைக்கின் டிசைன் இன்னும் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு தங்கள் பைக்குகளின் அம்சங்களை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. அதனால் மக்கள் மத்தியில் அதன் புகழ் தொடர்கிறது. இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 தற்போது ரூ. 1,50,795 முதல் ரூ. 1,65,715 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வைரலாகும் பில்
இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ. 1.8 லட்சம் ஆகும். ஆனால், சமீபத்தில் 1986-ல் வாங்கிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-ன் பில் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பைக்கின் ஆன்ரோடு விலை வெறும் ரூ. 18,700 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பில் 1986ஆம் ஆண்டுக்கு முந்தையது ஆகும். அதாவது கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் பழமையானது. இந்த பில்லை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்து வருகின்றனர். ராயல் என்ஃபீல்டு புல்லட் 1986ஆம் ஆண்டு என்ஃபீல்டு புல்லட் என்று அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.