6 வருடங்கள் கழித்து பிறந்த இரட்டையர்கள் - அனைவரையும் குழப்பிய இளம்பெண்
இளம் பெண் ஒருவர் அதிக வயது வித்தியாசமுள்ள தனது சகோதரனை இரட்டையர்கள் என கூறிய நிலையில் அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
பொதுவாக இரட்டையர்கள் என்றாலே ஒரே நாளில் பிறந்தவர்களும், பார்ப்பதற்கு ஒரே போல இருப்பவர்களும் தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அன்னா ஹிப்கின் என்ற பெண் ஒருவர் தானும், தன்னுடைய இளைய சகோதரரும் உண்மையில் இரட்டையர்கள் என தெரிவித்துள்ளார்.
அதாவது அன்னாவுக்கு 19 வயதான நிலையில், அந்த சகோதரனுக்கு 13 வயது தான் ஆகிறது. இதனால் குழப்பமடைந்த மக்களுக்கு அன்னா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனக்கும், சகோதரருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் டெக்னிக்கலாக அவர் என்னுடைய இரட்டை சகோதரர் தான். ஏனென்றால் இருவரும் ஒரே நேரத்தில் தான் கருத்தரிக்கப்பட்டோம். விவாகரத்து பெற்ற எனது பெற்றோர்களுடன் இருந்து உணவு அருந்தும் சமயத்தில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது என்னுடைய 13 வயது சகோதரன் நிஜத்தில் என்னுடைய இரட்டை சகோதரன் என்பது தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கருவை மட்டும் IVF முறையில் சுமந்த தாய், தம்பியின் கருவை ஃப்ரீசரில் பாதுகாத்ததாகவும், பின் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு IVF முறையில் தம்பி பிறந்ததால் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் 6 ஆண்டுகள் ஆகியதாகவும் அன்னா தெரிவித்துள்ளார்.
இதனை அன்னா டிக்டாக் வீடியோவாக வெளியிட அதி வைரலானது. லாஜிக்காக பார்த்தால் அனைத்து உடன் பிறப்புகளும் இரட்டையர்கள் தான் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.