திருமண நிகழ்ச்சியில் உயிரிழந்த 19 வயது மணப்பெண் - கதறிய உறவினர்கள்!

Kerala Marriage Death
By Sumathi Jan 18, 2023 06:27 AM GMT
Report

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது 19 வயது மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சி

கேரளா, பதாயிக்கர பகுதியை சேர்ந்த முஸ்தபா, சீனத் என்ற தம்பதியரின் மகள் பாத்திமா பதூல்(19). இவருக்கும் மூர்க்க நாடு என்னும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

திருமண நிகழ்ச்சியில் உயிரிழந்த 19 வயது மணப்பெண் - கதறிய உறவினர்கள்! | 19 Year Old Kerala Bride Dies In Reception

இந்நிலையில், திருமணத்தின் முந்தைய நாள் மணப்பெண்ணின் வீட்டில் வைத்து இஸ்லாமிய மத முறைப்படி மயிலாஞ்சி கல்யாணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது, குடும்பத்தாருடன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் மணப்பெண்.

மணப்பெண் மரணம்

அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். அதனையடுத்து உடனடியாக மணப்பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில் சிகிச்சையின் போது அவர் மயக்கத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் கூறுகையில் சத்தம் இல்லாத நெஞ்சு வலியால்தான் அந்தப் பெண் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போரென்ஸிக் ரிப்போர்ட் வந்ததற்கு பின்தான் மரணத்தின் காரணம் என்ன என்பது தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.