பாட்டி நீ என் பியூட்டி : 76 வயது மூதாட்டியின் காதலில் விழுந்த, 19 வயது இளைஞன்

By Irumporai May 27, 2022 06:54 AM GMT
Report

’’காதல் ஒரு பட்டர்பிளை போல வரும் வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும் ‘’ என ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு , காதல் சுகமானது , காதல் அழிவதில்லை காதலுக்கு ஜே , காதலுக்கு மரியாதை என பல்வேறு காதல் திரைப்படங்களை பார்த்திருக்கிறோம் ,

இன்றும் நம் நண்பர்களில் சிலர் என் காதல் சொல்ல வார்த்தை இல்லை என்று காதலிப்பவர்களையும் , நான் தாண்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா என சிங்கிள்தான் கெத்து என கூறும் கூட்டத்தை பார்த்திருப்போம்.

இன்னும் சொல்லப்போனால் தன்னை விட வயது அதிகம் உள்ள பெண்ணை காதலிக்கும் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் வரும் காட்சி போல  ‘’ஐ டோண்ட் வாண்ட் டு பி யுவர் பிரதர் ஜெஸ்ஸி’’ என வசனம் பேசும் பல கார்த்திக்குகளை கண்டிருப்போம்.

இந்த நிலையில் காதலுக்கு கண் இல்லை இது வெறும் பழமொழிதான் என அடித்து சொல்வோருக்கு 19 வயதான இளைஞர் ஒருவர்  76 வயது பெண்ணோடு நிச்சயதார்த்தம் செய்துள்ளார். 19 வயதான கியூசெப் டி'அன்னா தனது பாட்டியின் வயதுடைய பெண்ணுடன் திருமண படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.

பாட்டி நீ என் பியூட்டி : 76 வயது மூதாட்டியின்  காதலில் விழுந்த, 19 வயது இளைஞன் | 19 Year Old Boy Fell In Love 76 Woman

அதில் ​​அவருக்கு வாழ்த்துகள் கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால், அவரது படங்களைப் பார்த்ததும் மக்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்காமல், விமர்சனங்களை மட்டுமே கொடுத்தனர்.

இந்த நிலையில் கியூசெப் டி அன்னா வெளியிட்டுள்ள பதிவில் தனது காதலிக்கு காதலை சொல்வது போல் முழங்கால் போட்டு அமர்ந்து இதய வடிவில் பல சிவப்பு பலூன்களை வைத்திருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில், தனது காதலிக்கு முத்தமிடுவதை போல பல புகைப்படங்களை இணைத்து, வீடியோவாக வெளீயிட்டு உள்ளார்.

பாட்டி நீ என் பியூட்டி : 76 வயது மூதாட்டியின்  காதலில் விழுந்த, 19 வயது இளைஞன் | 19 Year Old Boy Fell In Love 76 Woman

இதனை இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதில் அவர், 'எங்கள் வாக்குறுதி' என்று தலைப்பிட்டுள்ளார். தன் காதலிக்கு கொடுத்த மோதிரத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பலர் இந்த இளைஞன் 76 வயதான பெண்ணின் பணத்தை பார்த்து திருமணம் செய்து உள்ளதாக கூறி வருகின்றனர்