தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 19 தொழிலாளர்கள் பலி - எங்கு தெரியுமா?

Indonesia Death Gold
By Sumathi May 20, 2025 07:55 AM GMT
Report

தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தங்க சுரங்க விபத்து

வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும். மேலும் கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம்,

gold mine

தும்பாங் தங்க சுரங்கம் என அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்களும் தங்க சுரங்கங்களை தோண்டி தங்கத்தை வெட்டி எடுத்து வருகின்றன. அந்த வகையில் மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது.

மீண்டும் ஆட்டத்தை காட்டும் கொரோனா; இந்தியாவில் 257 பேர் பாதிப்பு - உலகநாடுகள் அச்சம்

மீண்டும் ஆட்டத்தை காட்டும் கொரோனா; இந்தியாவில் 257 பேர் பாதிப்பு - உலகநாடுகள் அச்சம்

19 பேர் பலி

இங்கு உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த்துள்ளனர். இந்நிலையில் அங்கு பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

indonesia

அப்போது தொழிலாளர்கள் பலர் தங்கம் வெட்டி எடுத்து கொண்டிருந்த சமயத்தில் அந்த சுரங்கம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது சுரங்கத்தில் இருந்து உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.