நேரா 203 ரூபாய் ஜாஸ்தி - உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை - அதிர்ச்சியில் பயனாளர்கள்
சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பயன்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதிகரித்த கேஸ் விலை
ஆகஸ்ட் 1 ஆம் தேதி மத்திய அரசு வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 92.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,852.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதே நேரத்தில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை சென்னையில் 1,118.50 ரூபாய்க்கு விற்பனையானது.
வீட்டில் பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை 200 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கான விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
203 ரூபாய் ஜாஸ்தி
இந்நிலையில் தான் அதிரடியாக ஒரேயடியாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இது பல வகையில் எதிர்ப்புகளை பெற்று வருகின்றது. இந்த விலை ஏற்றத்தின் காரணமாக மீண்டும் உணவு பொருள்களின் விலை அதிகரிக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது. கடந்த மாதம் 1,695 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் 1,898 ரூபாயாக உயர்வு.
19 kg முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் போன்றவற்றின் விலை குறையும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், இது பெரும் சங்கடத்தை பொதுமக்களுக்கும், உணவு வியாபாரம் மேற்கொண்டு வருபவர்களுக்கு அளித்துள்ளது.