புத்தாண்டு ஸ்பெஷலா..!! சிலிண்டர் விலை மேலும் குறைப்பு..!
புத்தாண்டு துவங்கி தினம் அன்றே சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
சிலிண்டர் விலை
குறைப்பு உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் தான் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஆகியவை ஆகியவற்றின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
விலை குறைப்பு
கடந்த டிசம்பர் 22ஆம் தேதியான சிலிண்டரின் விலை ரூ.39.50 குறைந்து 1,929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீண்டும் மேலும் ரூ.4.50 குறைக்கப்பட்டு ரூ.1920-க்கு விற்பனையாகி வருகின்றது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரில் மாற்றமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.