? Live: தப்புமா மாமல்லபுரம்? 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்!
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
தப்புமா மாமல்லபுரம்?
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.
கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.
பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ துாரத்திலும், சென்னையிலிருந்து 210 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மாமல்லபுரத்தில் கடலோர காவல்படையினர் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.