பள்ளியில் தண்ணீர் அருந்திய 18 குழந்தைகளுக்கு வயிற்று வலி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி
பள்ளியில் மதிய உணவின் போது தண்ணீர் குடித்த 18 குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் அருகேயுள்ள மூங்கிலேரிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில் புதுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துக்கப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது.
இந்த துக்கப்பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 68-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகள் இன்று மதியம் வழக்கம்போல் மதிய உணவிற்கு செல்லும் முன் அங்குள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் குடித்துள்ளனர்.
இதில் குடிநீர் அருந்திய18-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீடீரென மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.