இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகம் வருகை..!

Sri Lanka Refugees Tamil nadu
By Thahir Apr 22, 2022 03:19 AM GMT
Report

இலங்கை நாட்டில் இருந்து மேலும் 18 பேர் தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் தினமும் மின்சாரம் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டு மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன. கடும் விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் நிலவுவதால் மக்கள் அகதிகளாக தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் படகின் மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

அவர்களை விசாரித்த க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மேலும் 5 பேர் ராமேஸ்வரம் அருகில் உள்ள சேராங்கோட்டை பகுதிக்கு படகு மூலம் வந்துள்ளனர்.

ஒரே நாளில் 5 குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில் அவர்களிடம் போலீசார் நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து இதுவரை 47 பேர் அகதிகளாக தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.