நீர்த்தொட்டியில் மூழ்கி உயிரிழந்த குழந்தை... உப்பில் புதைத்து பெற்றோர் செய்த காரியம்
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த 18 மாத குழந்தையை காப்பாற்றுவதற்கு பெற்றோர்கள் செய்த செயல் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குழந்தை
கர்நாடக மாநிலம் பாகல்கோட் நகரில் 18 மாத பெண் குழந்தை ஒன்று நிலத்தடி நீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது குழந்தையை உப்பில் புதைத்து வைத்தால் மீண்டும் உயிர்பெற்றுவிடும் என்ற நம்பிக்கையால், முகத்தை மட்டும் விட்டுவிட்டு, உடலை உப்பில் பெற்றோர்கள் புதைத்து வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி குழந்தையை அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைத்த போது இப்படி உப்புக்குள் புதைத்து வைத்துள்ளனர், மேலும் காதின் அருகே குர்ஆன் வசனங்களையும் ஒலிக்க விட்டுடுள்ளனர். இவ்வாறு செய்தால் குழந்தை மீண்டும் உயிர் பெற்றுவிடுவதாக நினைத்துள்ளனர்.
ஆனால் இதற்கு எந்தவொரு மருத்துவ ஆதாரமும் இல்லாத நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதால் உடலில் ஈரப்பதம் அப்படியே தங்கி இறுதியில் புழு உற்பத்தி ஆகிவிடும் என்பதற்காகவே இவ்வாறு உப்பை மேலே தூவி அடக்கம் செய்வார்கள்.
ஆனால் தற்போது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இவ்வாறு நடந்து கொள்வது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.