17 வருடங்களுக்கு முன்பு மனதை உலுக்கிய சம்பவம்!!
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்ததன் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பள்ளி முன்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் பள்ளியான கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
உலகையே உலுக்கி இந்தச் சம்பவம் பலரையும் கலங்கடித்ததுடன், இன்று வரை நீங்கா வடுவாகவும் இருந்து வருகிறது. இதன் 17-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இன்று தங்கள் வீடுகளில் தீ விபத்தில் இறந்த தங்கள் குழந்தைகளின் போட்டோக்களுக்கு மாலையிட்டதுடன், பிடித்தமான உணவு உள்ளிட்ட பொருள்களைப் படையலிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட பள்ளிக்கு முன் சென்று,
அங்கு வைக்கப்பட்டிருந்த 94 குழந்தைகளின் போட்டோக்கள் மீது மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.