பாலியல் துன்புறுத்தல் : 17 வயது சிறுமியை மாடியிலிருந்து தூக்கி வீசிய இளைஞர்கள்

Sexual abuse Uttarpradesh
By Petchi Avudaiappan Jun 23, 2021 10:07 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 உத்தரப்பிரதேசத்தில் 17 வயது சிறுமியை 3 இளைஞர்கள் மாடியிலிருந்து தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள மதுரா நகரத்தில் 3 இளைஞர்கள் சிறுமி தங்கியிருக்கும் குடியிருப்புக்குள் நுழைவதும், பின்னர் 17 வயது சிறுமி ஒருவர், மாடியிலிருந்து சாலையில் விழுவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனிடையே படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை 3 இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் வீட்டிற்கு அருகே வசித்து வரும் 3 இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக எனது மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாகவும், கடந்த திங்கட்கிழமை இரவு ஒருவர் எனக்கு போன் செய்து மகளிடம் பேச வேண்டும் என கூறியதற்கு நான் மறுத்துவிட்டதால் அந்த இளைஞர் தன்னை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரவு 8 மணிக்கு 3 இளைஞர்களும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தினர், பின் தூக்கிச் செல்ல முயன்றனர். குடும்பத்தினர் கூச்சலிட தொடங்கியதால் குற்றவாளிகள் எனது மகளை 2-வது மாடியிலிருந்து தூக்கி வீசிவிட்டு தப்பியோடி விட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.