பட்டப்பகலில் இளம்பெண்ணை கழுத்தறுத்த சிறுவன்;உடலை வாங்க மறுப்பு - உறவினர்கள் திடீர் சாலை மறியல்
18 வயது இளம் பெண் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
நெல்லை, திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மூன்றாவது மகள் சந்தியா (18). டவுன் சுவாமி நெல்லையப்பர் கீழரத வீதியில் உள்ள ராஜம் டாய்ஸ் அண்ட் ஃபேன்சி என்ற கடையில் பணி செய்து வந்தார்.
குடோனில் இருந்து கூடுதல் பொருட்களை எடுத்து வருவதற்காக சந்தியா குடோனுக்கு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கடைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சக பெண் ஊழியர்கள் குடோனுக்கு சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
கழுத்தறுத்து கொலை
உடனே தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார், உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு மற்றும் சக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அருகில் கடையில் பணிபுரியும் சிறுவனை சந்தியா காதலித்துள்ளார்.
அதன்பின் சில காரணங்களுக்காக காதலை முறித்துள்ளார். ஆனால் சிறுவன் அவரை காதலிக்க வற்புறுத்தி தனியாக இருப்பதை அறிந்து கொண்டு கொலை செய்துள்ளார். அதனையடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சந்தியாவிற்கு நீதி வேண்டும். குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும். அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை விட கூடுதல் நிதி வழங்க வேண்டும் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆதிதிராடவிடர் நலத்துறை துணை ஆட்சியர் பெனட் ஆசீர், போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.