45 வயது பெண்ணை சீரழித்த 17 வயது சிறுவன் - மகன் போல் வளர்த்ததில் விபரீதம்!
45 வயது பெண்ணை, 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கர்நாடகா, ஜவகல் பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
தகவலறிந்த போலீஸார் விரைந்து உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். அதில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்ததில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த்ததை ஒப்புக் கொண்டான்.
அந்த பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி, ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
சிறுவன் கொடூரம்
அந்த வீட்டுக்கு செல்லும் இந்த பெண், குழந்தையை தனது சொந்த மகனை போல நினைத்து பள்ளிக்கு அனுப்புவது, தேவையான உதவிகளை செய்வது என தாய் போல் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் வாழை தோட்டத்துக்கு வேலைக்கு சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிறுவன், அவரிடம் தவறாக நடக்க முயன்றதில், பெண் தப்ப முயன்றுள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து,
கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தற்போது போலீசார் சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.