தாலிபான்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 17 பேர் சுட்டுக்கொலை

afghanistan taliban Panjshir fall Taliban fire celebration
By Petchi Avudaiappan Sep 04, 2021 04:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது 17 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் அங்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை நிர்வகித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு புதிய நிர்வாகத்தை அமைக்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.

அதேசமயம் எதிர்ப்புப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் தாலிபான்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து வந்த நிலையில், பஞ்ச்ஷிரை கைப்பற்றியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 17 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் பஞ்ச்ஷிரை கைப்பற்றியதாக வெளியான செய்தியை தாலிபான் எதிர்ப்பு தலைவர்கள் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.