நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Silver Gold
By Vinoja Jul 16, 2026 05:33 AM GMT
Report

இன்று (ஜூலை 16) தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை, அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்து வந்தது. கடந்த வாரத்தில் மட்டும் காலை, மாலை என ஒரே நாளில் இருமுறை விலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து சரிவை சந்தித்தது.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? | 16Th Gold And Silver Price In Chennai

கடந்த 2 முதல் 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று (ஜூலை 15) மட்டும் எதிர்பாராத விதமாக உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180 ஆகவும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,05,440 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

ஆனால், இன்று (ஜூலை 16) மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? | 16Th Gold And Silver Price In Chennai

இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150 ஆகவும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.10,970 ஆகவும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.87,760 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? | 16Th Gold And Silver Price In Chennai

ஆனால் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.